அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 17 மார்ச், 2010

இவ்வருட கனடா உதயன் சர்வதேச விருது: இலங்கை பி. ஏச். அப்துல் ஹமீட், தமிழ்நாடு ரவி தமிழ்வாணன் ஆகியோருக்கு...

எதிர்வரும் (21.03.2010) ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஸ்காபுறோ நகரில் கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்தும் நான்காவது சர்வதேச விருது விழாவில், இரண்டு விருதுகள் முக்கிய தமிழ் பிரமுகர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக உதயன் நிறுவனர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தெரிவித்துள்ளார்
.
இவ்வருடம் வழங்கப்படும் ஆறு விருதுகளில் வெளிநாட்டு பிரமுகர்களுக்காக வழங்கப்படும் இரண்டு விருதுகள் முக்கிய தமிழ் பிரமுகர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உதயன் விருதுகள் நிறுவனருமான திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சிறப்பு விருதினை சர்வதேச அறிவிப்பாளர் திரு பி. ஏச். ஆப்துல் ஹமீட் அவர்களும், தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருதினை பிரபல புத்தகப் பதிப்பாளர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களும் பெறுகின்றார்கள்.
இவர்கள் இருவருக்குமான கனடா செல்லும் விமானச் சீட்டுக்களை பிரபல விமான சேவை நிறுவனமான எத்திஹாட் விமான சேவை நிறுவனம் வழங்குகின்றது.
திருவாளர்கள் அப்துல் ஹமீட், ரவி தமிழ்வாணன் இருவரும் வெள்ளிக்கிழமையன்று கனடா செல்லவுள்ளார்கள்.
கடந்த 2008ம் ஆண்டுக்கான இலங்கை சிறப்பு விருது பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வருட உதயன் சர்வதேச விருது விழாவில் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அமைச்சர்கள் சிலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG