அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 31 மார்ச், 2010

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையில் வவுனியா நகரப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம்

Loogix.com. Animated avatars. வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர் குமாரசுவாமி மற்றும் புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா நகர்ப் பகுதிகளில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கட்சியின் கடந்தகால வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் விளக்கிக் கூறியதுடன், தொடர்ந்தும் இப்பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதேவேளை நேற்றையதினம் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், வவுனியா நகரசபை எதிர்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது செட்டிகுளம், இரண்டாம் பாம், கிறிஸ்தவகுளம், முதலியார்குளம், நேரியகுளம், வீரபுரம் ஆகிய பிரதேசங்களிலுக்கும் விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG