அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 21 மார்ச், 2010

வாழ்க்கை நிரந்தரம் இல்லை : ஏ.ஆர்.ரகுமான்

பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான். இதுபற்றி அவர் கூறியது,
இந்த வருடம் முழுவதும் பிசியாக உள்ளேன். வெளிநாடுகளிலேயே 5 மாதங்களை கழிக்க உள்ளேன். ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் உள்ளன.

இசைக்காக நேரம் ஒதுக்குவது போல, ஆன்மிகம், குடும்பத்துக்கும் அதிக நேரம் ஒதுக்குகிறேன். எனது குடும்பம் எப்போதும் என்னுடன் இருப்பதையே விரும்புகிறேன். இல்லையென்றால் வெளிநாட்டுக்கு சென்று வந்து பார்க்கும்போது குழந்தைகள் என்னை அங்கிள் என அழைக்கும் நிலை வரலாம்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லை. 43 வயதாகிறது. இப்போது வயதானவன். அதையும் நல்லதாகவே உணர்கிறேன். இன்று என்ன செய்ய விரும்புகிறேனோ அதை மட்டும் செய்கிறேன். நாளை பற்றி யோசிப்பதில்லை. நல்லவற்றை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறேன் என்று கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG