அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 25 மார்ச், 2010

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் செய்த அதேதவறை எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் செய்யக் கூடாது -அமைச்சர் முரளிதரன்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் செய்த அதேதவறை எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் செய்யக்கூடாது என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பில் எதுவும் அறியாது தமிழ்மக்கள் கண்மூடித் தனமாக கடந்த தேர்தலில் அவருக்கு ஆதரவளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில வேளைகளில் சரத் பொன்சேகா ஆட்சி;க்கு வந்திருந்தால் தமிழ் மக்கள் பல்வேறு இடர்களை எதிர்நோக்க நேரிட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைவருக்கும் தற்போது கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் மட்டுமே வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களை விடவும் மாறுபட்டு செயற்படுகிறேன். நான் தமிழ் மக்களுக்கு மட்டும் உரிமையான அரசியல்வாதி அல்ல சகல இன சமூகங்களுக்கும் பொதுவாக செயற்படவே விரும்புகிறேன். வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன்மூலம் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். இனவாத கருத்துக்கள் முறியடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் சில புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளின் காரணமாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி சந்தேகநபர்களை விடுதலை செய்வதில் சிக்கல்நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் கருணா அம்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG