தமிழ் இனத்தின் தலைவரும் ஈழத்து காந்தி என அழைக்கப்படுபவருமான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 112 ஆவது வருட ஞாபகார்த்த தின நிகழ்வு நாளை மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.எம்.அந்தோனி மார்க் தலைமையில் மன்னார் பஸார் பகுதியில் இடம்பெறவுள்ளது.
பஸார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய சொற்பொழிவுகளை ஆற்ற பலர் வருகை தர இருக்கின்றனர்.அதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் நாளை புதன் கிழமை தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் இடம் பெற இருக்கின்றன. வவுனியா காளி வேப்பங்குள்ம் அந்தோனியார் ஆலயம், வேப்பங்குளம் சூசையப்பர் ஆலயம் ஆகிய திருத்தலங்களில் தந்தை செல்வாவுக்காக இரங்கல் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக