அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 31 மார்ச், 2010

தேர்தல் சுவரொட்டிகள் யாவும் 5 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்படும்



பொதுத் தேர்தல் பிரசாரங்களுக்காக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைத் தும் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்பட்டுவிடும். வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

காமினி நவரட்ண மேலும் தெரிவிக் கையில்,
“சுசுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் "கட்அவுட்'களை அகற்றும் பணி தொடர்ந் தும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, தேர்தல் தொடர்பான "ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்ட பல வாகனங் கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பில் வன்செயல்களில் ஈடுபட்ட சுமார்  130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பெருந்தொகையானோர் கைது செய்யப்படுவதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.  என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG