
இலங்கையர்கள் 13 பேர் பணியாற்றும் சவுதிக்குச் சொந்தமான கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. நிசா-அல்-சவுதி எனப்படும் இக்கப்பல் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஆபிரிக்க சமுத்திர நடவடிக்கை தொட்ர்பான நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.
சோமாலிய கடற்பரப்புக்கு அண்மையிலுள்ள ஏடன் குடாப்பகுதியில் வைத்து இக்கப்பல் கடத்தப்பட்டுள்ளதுடன் 13 இலங்கையர்களும் ஒரு கிரேக்கரும் இக்கப்பலில் இருந்துள்ளனர்.
எரிபொருளை ஏற்றிச்செல்லும் இக்கப்பல் ஜப்பானிலிருந்து சவுதியின் ஜெட்டா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.
இக்கப்பல் தற்பொழுது சோமாலியாவின் கடற்பரப்பில் கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கென்ய கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை இக்கப்பலை விடுதலை செய்வதற்கு கொள்ளையர்களால் கப்பம் கோரப்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லைடி என்றும் கென்ய கடற்படை கூறியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக