அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 3 மார்ச், 2010

புலம் பெயர் புலிகளிடமிருந்து பணம் வாங்கினாரா? தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு 12 கோடி செலுத்தப்பட்டுள்ளது


கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் தொகுதி அமைப்பாளர்களகாக கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு 12 கோடி ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் இராணுவத்தில் கடமையாற்றிய 123 பேருக்கு இவ்வாறு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ஓரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரையில் குறித்த நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான எழுத்து மூல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கேர்ணல்கள், லெப்டினன்கள், மேஜர்கள், கப்டன்கள் என பல்வேறு இராணுவ உயரதிகாரிகளுக்கு இவ்வாறு பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பணம் பெற்றுக் கொண்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG