யாழ் கொட்டடி பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (25) மாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
கொட்டடி பகுதியில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற வீடில்லாப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிகள் தொடர்பிலான பிரச்சினைகள் உட்பட அம்மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் றீகன் இளங்கோ அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளையடுத்தே அமைச்சர் அவர்கள் இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது கொட்டடி கடற்கரையோரப் பகுதிகளில் அமைந்துர்ள்ள வீடுகளைத் தனித்தனியாகப் பார்வையிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அம்மக்களது மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் வெகுவிரைவில் நல்லதொரு தீர்மானத்தை எடுப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது யாழ் மேயர் பிரதி மேயர் மாநகரசபை உறுப்பினர் கோமகன் உட்பட பலர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 25 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக