அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 6 பிப்ரவரி, 2010

ஹெய்ட்டியில் ஹெலிகொப்டர் விபத்து : இரு அமெரிக்கர் பலி


ஹெய்ட்டியில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்தனர்.

ஹெய்ட்டி நாட்டின் எல்லை அருகே, டொமினிக்கன் குடியரசு பகுதியில் ரெஸ்டாரேசியன் என்ற இடத்தில் இந்த ஹெலிகொப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் ஹெலிகொப்டர் நொறுங்கி தீப்பிடித்தது. ஹெலிகொப்டரில் பயணம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹலோவெக், ஜான்வார்டன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஆப்- பிரின்ஸ் நகரில் இருந்து டொமினின்கன் குடியரசில் உள்ள சான்டியாகோ திரும்பும்போதே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG