அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 19 டிசம்பர், 2009

புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் வடமாகாணத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக ஆய்வு.

புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளான புத்திஜீவிகள் தொழில்சார் நிபுணர்கள் முதலீட்டாளர்கள் கட்டடக் கலைஞர்கள் ஆகியோர் உட்பட பத்து லட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் உறவுகளையும் யாழ். பல்கலைக்கழகத்தையும் இணைத்து எமது தாயக்தை கட்டியெழுப்பும் திட்டம் தொடர்பான ஓர் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இன்று மாலை யாழ். பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆய்வுக்கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் துணைவேந்தர் யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் பீடாதிபதிகள் பேராசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் தமது ஆய்வுகளையும் முன்மொழிவுகளையும் அபிப்பிராயங்களையும் முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சண்முகலிங்கன் முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை பேராசிரியர் சிவச்சந்திரன் பேராசிரியர் சிவபாலன் பேராசிரியர் பேரின்பநாதன் பேராசிரியர் நடராஜசுந்தரம் பேராசிரியர் சின்னத்தம்பி பேராசிரியர் சிவநாதன் பேராசிரியர் சிவலிங்கராஜா பேராசிரியர் புஷ்பராஜா ஆகியோருடன் கலாநிதி சிறிகரன் கலாநிதி வேதநாதன் பேரவை உறுப்பினர் ராமதாஸ் முகாமைத்துவ பீடத்தைச்சேர்ந்த தேவராஜா திருமதி நாச்சியார் செல்வி அருளானந்தம் யாழ். பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் ஆழ்வார்பிள்ளை ஆகியோர் தமது உரைகளை நிகழ்த்தியதுடன் தமது பிரேரணைகள் மற்றும் அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தினார்கள்.

மிகவும் ஆக்கபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மிகவும் பயன்மிக்க விடயங்கள் புத்திஜீவிகளினால் தெரிவிக்கப்பட்டதுடன் ஆக்கபூர்வமான பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இந்நிகழ்வில் நன்றியுரையினை யாழ். பல்கலைக்கழக ஆரம்பத்தில் முதலாவதாக இணைக்கப்பட்ட மாணவனும் தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் முழுநேர மக்கள் சேவைக்காக தாயகம் வந்திருப்பவருமான மித்திரன் அவர்கள் நிகழ்த்தினார்.

புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளையும் யாழ். பல்கலைக்கழகத்தையும் இணைத்து எமது தாயக்தை கட்டியெழுப்பும் திட்டம் தொடர்பான இவ் ஆரம்ப ஆய்வுக்கூட்டம் மிகவும் பிரயோசனமாக இடம்பெற்ற நிலையில் இதனை முன்கொண்டு செல்லுமுகமாக அடுத்த கூட்டத்தினை ஜனவரி மாத ஆரம்பத்தில் நடாத்துவதென பங்குகொண்ட அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






0 கருத்துகள்:

BATTICALOA SONG