
ரஷ்யாவில் உலியனோஸ் வக் பகுதியிலுள்ள வோல்கா நகரில் இராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. கடந்த 13ஆந்திகதி அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில், இராணுவத் தளவாடங்கள், வெடிபொருட்கள் எரிந்து நாசமாயின, தீயை அணைக்கச் சென்ற 2 வீரர்கள் உடல் கருகினர். மேலும் அங்கு பணிபுரிந்த 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதற்குப் பாதுகாப்பு (இராணுவ) அமைச்சகத்தின் கவனக்குறைவும், அலட்சியமும்தான் காரணம் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் மற்றும் பல உயர் அதிகாரிகளை அதிபர் மெத்வதேவ் பதவி விலக்க உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக