அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 25 நவம்பர், 2009

ஏ-9 வீதியூடாக செல்ல பாரவூர்தி உரிமையாளர்களுக்கும் அனுமதி


யாழ்.மாவட்டத்திலிருந்து ஏ-9 வீதியினூடாக கொழும்பு செல்லும் வாகனத் தொடரணி சேவையில் பாரவூர்தி உரிமையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரச அதிபர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், "யாழிலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் பொருட்களைக் கொண்டு வர விரும்பும் பாரவூர்தி உரிமையாளர்கள் அவர்களுக்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வாகனத் தொடரணியில் இணைந்து கொள்ள முடியும்.

பாரவூர்தி உரிமையாளர்கள் தொடரணியில் இணைய விரும்பின், புறப்படும் தினம் காலை 6.30 மணிக்கு முன்னர் நாவற்குழி அரச களஞ்சியத்தில் பதிவினை மேற்கொள்ள வேண்டும். இதனைவிட யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்ல விரும்புகிறவர்கள் முதல் நாள் பொருட்களை நாவற்குழி களஞ்சியசாலைக்கு எடுத்துச் சென்று, பாதுகாப்பு அதிகாரிகளின் பரிசீலனையின் பின் மறுநாள் வாகனத் தொடரணியில் இணைய முடியும்.

தொடரணியில் இவ்வாறு இணையும் பாரவூர்திகள், பாரவூர்தியின் பதிவுப் புத்தகம், நடப்பாண்டு வரி அனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகனத் தகைமைச் சான்றிதழ் என்பவற்றின் மூலப்பிரதிகளை வைத்திருக்க வேண்டும். பாரவூர்தி சாரதி, உதவியாளர், கொள்வனவு உத்தியோகத்தர் போன்றோர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

நடைமுறைகள் பின் பாரவூர்திகள் சீல் வைக்கப்பட்டு தொடரணியில் இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG