அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மனித உரிமை-பாதுகாப்பு தொடர்பில் இலங்கை-ரஷ்யா இடையில் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து


இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்த சூழலையடுத்துத் தற்போது அமைதி நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாகாமலும் மனித உரிமை பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இன்று இது தொடர்பாக இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லகம தெரிவித்தார்.

மேற்படி வைபவம் இன்று காலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது ஒப்பந்தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுலாத்துறை, மனித உரிமை என்பன தொடர்பாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கி வி. லவ்ரோவ் உடன் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG