வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 12 மார்ச், 2010
அவகாசம் கொடுங்க... நித்யானந்தானுக்கு வக்காலத்து வாங்கும் ராம கோபாலன்!
ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட நித்யானந்தன் குற்றமற்றவராகவே தங்களுக்குத் தெரிவதாகவும் அவருக்கு இன்னும் அவகாசம் தரவேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஒருவர் மீதுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில் அவர் குற்றமற்றவர் என்று நினைப்பதுதான் மரபும், பண்பாடும் ஆகும்.
சுவாமி நித்யானந்தா தன்நிலை விளக்கமளிக்க அவருக்குப் போதிய கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும்.
இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்படி அவர் குற்றமற்றவர் என்றே நம்புகிறோம். ஆசிரமத்துக்குச் சொத்து இருப்பது பாவமல்ல. அந்த சொத்து தவறான முறையில் சேர்க்கப்பட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம். வழக்கு தொடுப்பதன் மூலம் அது குறித்து விசாரிக்க முடியும்.
வருமான வரித்துறையினர் இது குறித்து ஆய்வு நடத்த முடியும்.
அரசியல் ஆசாபாசங்களால் உந்தப்பட்டும், பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்துடனும் அவரை நடத்துவதும் துறவிகளையே இழிபடுத்துவதாகும். இதை இந்து சமுதாயம் ஒருநாளும் ஏற்காது.
சுவாமிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களைப்பற்றி ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு சிறு கும்பல் மட்டுமே இதைச் செய்வதும் சாதாரண மனிதன் இதில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாகிறது.
அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் வெளியிடும் வரை காவல்துறையும், அரசும், மக்களும் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது..., என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























1 கருத்துகள்:
பெரியார்தாசன்
தாசன் இந்தப் பெயரே அடிமைத் தனத்தின் வழியாகவும் , அன்பின் வழியாகவும் பார்க்கப் படலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் யாருடைய கொள்கையின் பால் மிக ஈர்க்கப்பட்டனரோ அவர்கள் பெயருடன் இந்த தாசனை சேர்த்தனர். இவர்களில் எல்லோரும் பெயரில் மட்டுமா? என்பது வினா?
கண்ணதாசன், பாரதிதாசன், சுரதா என நிறைய பேர்கள் சமூகத்தில் உண்டு. பெரியார்தாசன் இந்த பெயரும் நம் சமூகத்தில் நன்கு அறியப் பட்ட ஒன்று. கருத்தம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்த பெரியார்தாசன் எனப் பெயர்கொண்ட நாத்திக வாதியாக அறியப் பட்ட ஒரு மனிதர் தான் இத்தனை நாள் கைகொண்ட ஒரு கருத்தாக்கம் தனக்கும் சமூகத்துக்கும் பயன் அளிக்காது என்பதை உணர்ந்து கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது!
ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...
எங்கோ எதுவோ பிழையோ? யார் செய்த பிழை? ஒரு நாத்திகமான சிந்தனை உடையதாக சொல்லப் பட்ட ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட மத நூல் மட்டும் உயர்ந்தது என்னும் கொள்கைப் பிடிப்பு பெற எது காரணம்?
நான் இவரைப் பற்றி தாக்கி இங்கு எதுவும் எழுத முயலவில்லை. தனி மனிதனும், சமூகமும் நிறைவுடன் வாழ மதம் அவசியம் என்பது போல் ஒரு கருத்தாக்கத்தை ஒரு தத்துவ வாதி என சொல்லப் படும் மனிதர் ஏற்கிறார் என்றால்?
இத்தனை நாள் தான் கொண்ட கொள்கையைப் பற்றி சிந்திக்காதவரா? அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா? அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார்? புகழுக்காகவா? இப்போது மாறியதும் அதற்காகவா?
பெரியார் எப்போதும் தான் சொன்னதை யோசித்து சரி என கொண்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற சொல்லியக் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டு தன் பெயர் மாற்றிக் கொண்ட மனிதனின் உண்மை முகம் எது?
போலிச் சாமியாரைப் பார்த்த நாம்? இன்று யாரைப் பார்க்கிறோம்?
5:56 AM | Category: |
கருத்துரையிடுக